<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/2295451292425192720?origin\x3dhttps://narainapillairocks.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

வணக்கம். நாங்கள் வவ்வ் - வினுஷா, வித்தியாஷ்னி, அதிதி மற்றும் விருந்து. இதுதான் நாராயண பிள்ளையைப் பற்றிய நம் வலைப்பூ.

Naraina Pillai: A National Icon
படிமம்:Old Sri Mariamma temple Singapore.jpg


மகா மாரியம்மன் ஆலயம்

சிங்கப்பூரில் ஆகப் பழமையான கோவில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில். 1827-ல் மாரியம்மன் கோவில் கட்டப்பட்டது. இவ்வாலயம் அன்று தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்து குடியேறிய குறிப்பாக நாகப்பட்டினம், கடலூரிலிருந்து வந்த தமிழ் மக்களின் உறுதுணையோடு இந்த ஆலயம் உருவாக்கப்பட்டது. மாரியம்மனை முதற் தெய்வமாகவும், மூலஸ்தான தெய்வமாகவும் அமைத்துள்ளார்கள்.


அன்று வீட்டுத் தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் பலருக்கு இருந்து அருள் பாலித்த மாரியம்மன் இங்கும் நோய் காக்கும் தெய்வமாகவும் நிலைப்பெற்று இருந்து இருக்கிறாள். அம்மை நோய் வராமல் இருக்க வேண்டும் என்பதற்காக வழிபாட்டுத் தலங்களை அன்று வந்தவர்கள் இந்தக் கோயிலை அமைத்துள்ளார்கள்.

இவ்வாலயம் தற்போது சைனா டவுன் என்று அழைக்கப்படும் வட்டாரத்தில், சவுத் பிரிட்ச் சாலை என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது. ஆரம்ப காலத்தில் கோயில் அமைக்கப்பட்ட போது நான்கு நிலைக்கொண்ட கோபுரமும், அதனை ஒட்டி அமைக்கப்பட்ட வாயில் நிலையையும் மாறாமல் இருக்க, காலத்திற்கு ஏற்ற உள்ளமைப்பு மாற்றம் பெற்று அன்றும் இன்றும் தமிழர் சமுதாயத்திற்கு ஒரு முக்கிய வழிபாட்டு தலமாகவும், சமூக சேவை நிலையமாகவும் இருந்து வருகிறது.

நாராயணப்பிள்ளை வருகை

இந்த மகா மாரியம்மன் ஆலயம் உருவாகவும், தோற்றம் பெற்று அமைவதற்கும் காரண கர்த்தாவாக இருந்தவர் தமிழ் நாட்டிலிருந்து வந்த திரு.நாராயணப்பிள்ளை ஆவார். அவர் சிங்கப்பூருக்கு வந்த முதல் இந்தியர். பிரிட்டீஸ் கிழக்கிந்திய கம்பெனியில் பிள்ளை ஒரு குமாஸ்தாவாகப் பினாங் தீவில் [மலாயா] பணிபுரிந்து வந்தார்.

சிங்கப்பூரை இனம் கண்டு, அடையாளம் காட்டிய சர்.ஸ்டாம்போட் ராபிள்சுடன் பினாங்கிலிருந்து வந்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆவார். சர்.ஸ்டாம்போர்ட் ராபிள் 1819 - ல் சிங்கப்பூருக்கு இரண்டாவது முறை வந்தபோது அவருடன் இந்து வணிகர்களும், இந்தியானாக என்ற கப்பலில் அழைத்து வந்தார்.அவர்களுடன் 120 சிப்பாய்களும்,உதவியாளர்களும் வேலைக்காரர்களும் வந்தனர்.அவர்களில் பலர் இந்துக்காளாகும்.

நாராயணப்பிள்ளை இங்கு பிரிக்லினி என்ற வர்த்தக அமைப்பை நிறுவி அதன் வழி வியாபாரமும், வர்த்தகத்தின் மூலமாகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். ராபிள்ஸ் உதவியுடன் அவர் செங்கல் ஆலை ஒன்றைத் தொடங்கியதுடன் சிங்கப்பூரில் முதல் கட்டுக் குத்தகையாளராகவும் விளங்கினார். நாராயணப்பிள்ளை தொடங்கித் தொழில் வளர தொடங்கியதால் பினாங்கிலிருந்து தமக்குத் தெரிந்த திறமையான தச்சர்களையும், கட்டுமானத் தொழிலாளர்களையும் சிங்கப்பூருக்கு வரவழைத்தார்.

நாளடைவில் நாராயணப்பிள்ளையின் கவனம் ஜவுளி வியாபாரத்தில் மீது திரும்பியது.பருத்தி ஆடைகள் விற்கும் கடை ஒன்றை குரோஸ் சாலையில் (Cross Street) அவர் நடத்தினார். 1822-ல் மூண்ட தீயினால் அவர் கடையை இழந்தார். சேர்த்த செல்வம் தீக்கிரையானதால் ராபிள்ஸ்சின் உதவியை நாடினார். ராபிள்ஸ்சின் உதவியுடன் மீண்டும் ஒரு கடையைத் திறந்தார்.

இந்தியாவிலிருந்து வந்த குடியேறிகளில் தமிழர்களும் ஒரு சில வங்காள இனத்தவரும், செளத் பிரிட்ஜ் ரோடு, தஞ்சோங் பகார், டோ பி காட், சிராங்கூன் ஆகிய நகர்ப்புறப் பகுதிகளில் வசிக்கத் தொடங்கினர். தொடக்கக்கால இந்தியக் குடியேறிகளில் வர்த்தகர்கள், சிப்பாய்கள், தொழிலாளர்கள், படகோட்டிகள், சலவைத் தொழிலாளர் எனப் பலர் இருந்தனர்.

அதே சமயம் திரு. நாராயணப் பிள்ளையை இந்திய சமூகத் தலைவராகவும் ஆங்கில அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளது. நாட்டு மக்கள் நன்றாக இருக்கவும், நல்ல சுபிட்ச வாழ்க்கை அமையவும் ஆண்டவன் அருள் வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தினை அமைக்க எண்ணினார். வருங்காலத்தில் சிங்கப்பூர் ஒரு முக்கிய கேந்திரமாக விளங்கப் போகிறது என்ற யூகம் அவர் மனதில் உதித்திருக்கிறது.

தமிழ் நாட்டின் கடலூரைச் சேர்ந்த பலரும் திரு. நாராயணப் பிள்ளையிடம் வேலை பார்த்தனர். அப்படி வந்தவர்களில் பொய்கையூரைச் சேர்ந்த பண்டாரமும் ஒருவர். தமது ஊர் முத்து மாரியம்மன் கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்த அவருக்கும் உறவினருக்கும் இடையில் எழுந்த பிரச்சனையால், கோயிலில் இருந்த அம்மன் சிலையைத் தன்னோடு எடுத்துக் கொண்டு பினாங் வந்திறங்கினார். நாராயணப் பிள்ளையை இல்லை என்று அறிந்து சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூர் வந்த அவர் அம்மன் சிலைக்குக் சிறிய கோயில் ஒன்றை கட்ட நாராயணப் பிள்ளையின் உதவியை நாடினார்.

கோவிலுக்கு நிலம்


அப்போது சிங்கப்பூரில் இந்துக்களின் எண்ணிக்கை பெருகவே கோயிலுக்கான தேவை ஏற்பட்டது. கோவில் அமைப்பதற்கான நிலத்தை வழங்கக் கிழக்கிந்திய கம்பெனி முதன்முதலாக 1822-ல் ஆண்டில் முன் வந்தது. வழிப்பாட்டுத் தலத்திற்கு ஆங்கிலேயரால் சுட்டிக்காட்டப்பட்ட இடம் தெலுக்காயரில் தெலுக் ஆயர் சாலை (Telok Ayer Street) ஆனால், அவ்விடம் இந்து சமய ஆலய ஆகமங்களுக்கும் சடங்குகளுக்கும் உரிய இடமாக அமையவில்லை. தினம் நடக்கும் அபிஷேகத்திற்கு நல்ல நீர் கிடைக்காத இடமாதலால் அந்த இடம் தவிர்க்கப்பட்டது.

அப்போது நகரத் திட்ட அமைப்பில் முக்கிய மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. 1819஖1823 காலக் கட்டத்தில் சிங்கப்பூரின் பிரிட்டிஷாரின் பிரதிநிதியாக இருந்தவர் மேஜர். கபார்குவார். கோயில் கட்ட ஸ்டாம் போர்ட் கால்வாய் (Stamford Canel) அமைந்துள்ள பகுதியில் இந்துக்கோயில் கட்டுவதற்கு நாராயணப்பிள்ளைக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த இடமும் வழிபாட்டுக்கும், ஆலயத்திற்கும் உகந்த இடமாக அமையவில்லை. இறுதியாக 1823-ல் இப்போதுள்ள மாரியம்மன் கோவில் அமைந்துள்ள இடமான சவுத் பிரிட்ஜ் சாலையில் கோவில் கட்ட அனுமதி தரப்பட்டது.

1827-ல் கோவிலின் அடித்தளப்பணி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் மரப்பலகை, கூரையுடன் கூடிய சிறு குடில் அமைத்து "சின்ன அம்மன்" என்ற பெயரில் சிலையைப் பிரதிஷ்டை செய்து வழிபாட்டைத் தொடங்கினார் நாராயணப் பிள்ளை. அந்த அம்மன் இன்று மகா மாரி அம்மன் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இருக்கிறது.

வளர்ச்சியும், மாற்றமும் தவிர்க்க இயலாதவை. தேவைகளும், அவசியமும் பெருக 16 ஆண்டுகளுக்குப் பின் சிறு அளவிலிருந்த கோயில் 1862-ல் முழுமையான செங்கல் கட்டிடமாக மாற்றப்பட்டது. தற்போதுள்ள மூலவரான பெரிய அம்மன் எப்போது கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது என்பதற்கான ஆதாரம் இல்லை. அதன்பின் சுமார் 100 ஆண்டுகள் மாற்றமின்றி இருந்த ஆலயம்,1962-ல் இப்போதுள்ள நிலையில் மாற்றம் கண்டது. புதுபொலிவும், உள்ளமைப்பு விரிவும், இன்றைய கால தேவைக்கு ஏற்ப நவீன வசதியும், பொதுமக்கள் தேவைக்கும் சமூக, சடங்குகளுக்கு ஏற்ற திருமண மண்டபம், அரங்கம் போன்றவை விரிவு பெற்றன. சிற்பக்கலைக்கும், வண்ணத்திற்கும் புனரமைப்பு தமிழ் நாட்டிலிருந்து வந்த சிற்பிகள்/ஸ்தபதிகள் உயிருட்டினர்.

1827-ல் ஆலயம் உரு வாகியிருந்தாலும் ஜூன் திங்கள், 1936-ல் தான் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதற்கிடையில் கும்பஷேகம் குடமுழுக்கு நடந்தாக எந்த வரலாற்று குறிப்பும் இல்லை. இரண்டாவது குடமுழுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 1949-ல் மூன்றாவது குடமுழுக்கு ஜூன், 6-ம் நாளும், 1977-ல் நான்காவது, குடமுழுக்கு செப்டம்பர் - 6-ம் நாளும், 1984-ல் ஐந்தாவது குடமுழுக்கும், 1996 ல் மே மாதம் 19-ம் நாள் நடந்துள்ளது.

தஞ்சம் என்று வந்தோருக்கு..

மகா மாரியம்மன் ஆலயம் ஆரம்ப காலங்களில் வழிபாட்டுத் தலமாக மட்டும் விளங்கவில்லை. சமூக பணியிலும், பொது மக்கள் தேவைகளிலும் சேவை செய்வதிலும் தலையாய இடமாகத் திகழ்திருக்கிறது. பிரிட்டீஸ் ஆட்சிக் காலங்களில் தமிழ் நாட்டிலிருந்து இங்கு வேலை தேடி வரும் தமிழர்க்கு உதவி நல்கிடும் வேடங்தாங்கலாகவும் இருந்துள்ளது. ஒரு நிலையான தொழில்,வேலை கிடைக்கும் வரை கோவிலில் தங்கியிருக்க அனுமதி அளித்துள்ளார்கள்.

சிங்கப்பூரையும் மலாயாவையும் [இப்போது மலேசியா] பிரிப்பது மலாக்கா ஜலசந்தி. இதன் நீளம் ஒரு கி. மீ. தூரம்தான். ஆகவே சிங்கப்பூரை ஓட்டியுள்ள மலாயா ஊர்களிலிருந்து தமிழ் நாடு செல்ல சிங்கப்பூர் துறைமுகம் வசதியாக அமைந்திருந்தது. தமிழ் நாடு செல்லும் இந்தியர்கள் ஓரிரு நாட்களுக்கு முன்னமே சிங்கப்பூர் வந்துவிடுவார்கள். சில சமயங்களில் குறித்த காலத்தில், குறித்த நேரத்தில் கப்பல் வராதபோது அவர்களுக்கு அபயக்கரம் காட்டியுள்ளது மாரியம்மன் கோயில். மேலும் பல உதவிகள் புரிந்துள்ள நிலையமாகவும், சமூக வளர்ச்சிக்கும் மகா மாரியம்மன் உறைவிடமாக இருந்துள்ளது, இருந்தும் வருகிறது.

இந்திய திருமணங்களைச் சட்டப்படி பதிவுசெய்து செய்யும் பதிவகமாகவும் மகா மாரியம்மன் ஆலயமாகச் செயல்பட்டு வருகிறது. அதோடு மட்டுமின்றி சம்பிராதய சடங்கு பூர்வமான வைதீக புரோகிதர்களைக் கொண்டு திருமண சடங்கும் நடைபெறுகிறது. தற்போது மருத்துவ முகாம், இந்து சமய நிகழ்ச்சிகள், சமய வகுப்புகள் ஆகியவற்றை நடத்துவதோடு பள்ளி குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கும் ஆதரவு நல்கி வருகிறது.

கோயிலில் சீனர்களின் பங்கு

ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் "சைனா டவுன்" பகுதியில் அமைந்திருக்கும் காரணத்தால் சுற்றுபுறத்திலிருக்கும் சீனர்களும் மாரியம்மன் கோயிலுக்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். அந்தக் காலத்தில் கோயிலில் விளக்கேற்ற எண்ணெய் வழங்கியோரில் பெரும்பாலோர் சீனர்களே என்று தெரிகிறது. ஆண்டுதோறும் நடக்கும் தீமிதி விழாவில் சீனர்கள் பெரும்வாரியாக பங்கு பெறுகிறார்கள்.ஆயிரக்கணக்கான எலுமிச்சை பழங்களையும் இலவசமாக வழங்குகிறார்கள். கட்டுமான பணிகளுக்கு நிதியுதவி வழங்கியவர்களில் பலர் சீனர்கள்பொதுவாக இந்து சமயத்திற்கும் சீன மதத்திற்கும் அதிக வேறுபாடுகள் இல்லை. நமது இந்து சமயத்திலிருக்கும் விநாயகர், அம்மன், சரஸ்வதி, அனுமான் போன்ற தெய்வங்கள் வேறு பெயருடன், சற்று வித்தியசமான அமைப்புடன் இருக்கும். தங்களின் கருணைக் கடவுளுக்குச் சமமாக (குவான் இன்) மதித்தனர். ஆக, அம்பாள் அவர்களுடன் ஐயக்கியமாகிவிட்டாள். அவளை முழுமையாக நம்பியவர்களின் இடர்களை, துயர்களை, நோயினைத் தீர்த்து வைத்திருக்கிறாள். இன்றும் பல சீனர்கள் இவ்வாலயம் வந்து பிராத்தனையும், வழிபாடும் செய்வதைக் காணலாம். .ஆண்டுதோறும் நடக்கும் தீமிதி விழாவில் சீனர்கள் பெரும்வாரியாகப் பங்கு பெறுகிறார்கள்.

Labels: ,